Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய் நடித்து வரும் 60ஆவது திரைப்படத்தின் தலைப்பு 'பைரவா' என்பது ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தலைப்புக் குறித்த சுவாராஸ்யமான தகவலொன்று தற்போது வெளிவந்துள்ளது.
பிரபல இயக்குநர், நடிகர் ராகவா லோரன்ஸ் தான் இந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர். ஏற்கெனவே தான் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்துக்கு 'கால பைரவா' என்ற தலைப்பு வைத்து அதை முறைப்படிப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் 'விஜய் 60' திரைப்படக்குழுவினர் ராகவா லோரன்ஸை அணுகி 'பைரவா' தலைப்பைக் கேட்டதாகவும் தனது உயிர் நண்பர் விஜய்க்காக உடனே அவர் 'பைரவா' தலைப்பை விட்டுக்கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே அஜீத்துக்காக 'வேதாளம்' தலைப்பை விட்டுக்கொடுத்த ராகவா லோரன்ஸ் தற்போது விஜய்க்காக 'பைரவா' தலைப்பையும் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago