Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹொலிவூட்டிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர், வின் டீசல் உடன் 'டிரிபிள் எக்ஸ்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே இன்னொரு ஹொலிவூட் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது. அதாவது ஹொலிவூட்டின் ஆக்ஷன் ஸ்டாரான டொம் குரூஸ் நடிப்பில் 'தி மம்மி' படம் உருவாக இருக்கிறது. இதில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு வந்தது.
படத்தின் கதைப்படி பிளாஸ்பேக்கில் வரும் ராணி கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்க வேண்டுமாம். இந்த ராணி வேடத்துக்கு ஆசிய பெண் ஒருவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் கருத, தீபிகாவை வைத்து நேர்முக தேர்வு நடத்தியிருக்கிறார். ஆனால், தீபிகாவுக்கு அந்த ரோல் செட்டாகவில்லையாம். இதனால் தீபிகாவுக்கு இப்பட வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
வின் டீசலை தொடர்ந்து டொம் குரூஸ் உடனும் நடித்து விடலாம் என்று எண்ணியிருந்த தீபிகாவுக்கு இது ஏமாற்றமாகிவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago