2025 மே 17, சனிக்கிழமை

தீபிகாவின் அர்ப்பணிப்பு

George   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு வரை நடிகை தீபிகா படுகோனே நேரம் காலம் பார்காமல் உழைத்து வருகின்றார்.

பஜிராவ் மஸ்தானி மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்ப்பார்பில் திரைப்படக்குழுவினர் கடிகாரத்துடன் போட்டி போட்டு உழைத்து வருகின்றனர்.

தற்போது பஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவு நேரம் வரை தீபிகா படுகோனே டப்பிங் பேசியுள்ளார்.

அண்மையில், டப்பிங் பேசிவிட்டு ஸ்டுடியோவில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் புகைப்படமொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதுடன் தீயாக பரவி வருகின்றது.

ஒரு நடிகை தனது தூக்கத்தை தொலைத்து இவ்வளவு அர்பணிப்புடன் செய்ற்படுவது அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .