Freelancer / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுலரெலியா - இராகலையில் குறுந்திரைப்பட கலைத்துறைக்கு உயிர் ஊட்டும் வகையில் "த ரூஸ் இன்ட்" அந்த தந்திரத்தின் முடிவு என்ற அரை மணிநேர திரைப்படத்தை கலைஞரும் திரைப்பட இயக்குனருமான ரொணி தயாரித்துள்ளார்.
இராகலை பிரதேசத்தை மையமாக கொண்டு பட தயாரிப்பாளர் ராணியின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "த ரூஸ் இன்ட்" திரைப்படம் தோட்டம் ஒன்றின் விவசாய காணி ஒன்று ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் ஏற்படும் பிரச்சினையை எடுத்துக்காட்டி தயாரிக்கப்பட்ட திரைப்படமாக வெளிவந்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ரொணி காளி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதுடன்,முதலாளி ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயகுமார் மற்றும் காவல் காரன் தங்கராஜியாக நடிகர் சிவராமனும் இவருக்கு மகனாக சிறுவன் பிரகிசானும்,மாரி கதாபாத்திரத்தில் தோட்டக்காரனாக நடிகர் செழியனும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவு - சதீஸ் தங்கவேல் செய்துள்ளார்.இசையமைப்பினை ஷான் திறமையாக செய்துள்ளதுடன்,படத்தின் கலர் கிரேடிங்- பாஸ்கர் செய்துள்ளதுடன்,
உதவி இயக்குனர் மணிவண்ணனின் இப்படத்தை - ரொணி டிரீம் பிரொடக்ஷன் தயாரிப்பு செய்துள்ளது.
"த ரூஸ் இன்ட்" திரைப்படம் அண்மையில் இராகலை லக்மாலி திரையரங்கில் இரண்டு தினங்கள் 13 காட்சிகளாக திரையிடப்பட்டது.



11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026