Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க வேண்டுமென, சில நடிகைகள் விரும்புகின்றனர். அந்தவகையில், நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு, ராம் இயக்கத்தில் தரமணி படத்தில், இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது.
இந்நிலையில், மகளிர் தினம் தொடர்பாக, சென்னைக் கல்லூரியொன்றின் நிகழ்ச்சியின் பங்கேற்ற ஆண்டரியா, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுவதாகவும், ஒரு நடிகையின் திறமை, அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறதென்றும் கூறினார்.
தரமணி படத்துக்கு, நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்புகூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும், மகிழ்ச்சி அடைந்துவிடுவேன் என எதிர்பார்க்காதீர்களென்று கூறியதுடன், அது ஒருபோதும் தனக்கு மகிழ்ச்சியை தராதென்றும் கூறியுள்ளார்.
திரையில் தான், நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயாரென்றும் குறிப்பிட்டுள்ள அவர், கதையில் அந்தக் காட்சி, மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
2 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
17 minute ago