Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவின், டைட்டிலை வெல்வாரோ இல்லையோ, நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்றே பலர் கணித்திருந்தனர்.
ஆனால் திடீரென ரூ.5 இலட்சம் ரூபாயுடன் கவின் வீட்டை விட்டு வெளியேறினார். கவினின் வெளியேற்றம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து விரிவாக ஒரு பதிவை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “எனக்கு எப்படி ஆரம்ப்பிப்பது என்று தெரியவில்லை. இந்த தகவல்களை பிகிபாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அல்லது எனக்கு இருக்கும் பிரச்னைகள் முடிந்த பின்னர் உங்களிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை சொல்லி விடுகிறேன். என் வாழ்நாளில் மிகவும் மோசமான காலக்கட்டத்தில் இருந்தேன். என்னுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.
எனவே என்னை நிரூபித்து கொள்ள பிகிபாஸ் நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டேன். நான் பணத்திற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றாலும் நான் யார் என்பதையும் நீருப்பிக்க பிக்பாஸ் எனக்கு உதவும் என முடிவு செய்தேன்.
எனக்கு இப்போது சில பிரச்னைகள் இருக்கிறது. இதன் காரணமாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு என்னால் முழுதாக நன்றியை தெரிவிக்க முடியவில்லை.
நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கும் பதில் அன்பு கட்டுவதற்கு முன்பாக எனது குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். அனைத்திற்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. எனக்கு அது தெரிந்தாலும் சில இடங்களில் நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.
நான் செய்த சில விஷயங்கள் பங்கேற்றவர்களை காயப்படுத்திருந்தால் அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.
நீங்கள் என் மீது காட்டிய அன்பை நான் ஏற்றுக்கொண்டதை போலவே, சிலர் காட்டிய வெறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் சிலர் என் மீது காட்டிய வெறுப்பையும் அன்பாக மாற்ற முயற்சி செய்வேன்.
போட்டியில் பங்கேற்ற 17 பேருக்கும் சரியான பாடத்தை நீங்கள் கற்றுக்கொடுத்தது நீங்கள் தான். இதோடு முடியப்போவதில்லை, நீங்கள் காட்டிய அன்புக்கு நான் கடன்பட்டுள்ளேன். உங்களை காயப்படுத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம்” என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
6 minute ago
17 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
33 minute ago
48 minute ago