J.A. George / 2021 ஜனவரி 12 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன்.
சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வெளியே ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் வெளியிட்டால் ஈஸ்வரன் படத்தை வெளியிடமாட்டோம் என்று கூறினர்.
திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையடுத்து ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது.
ஈஸ்வரன் படத்திற்கான காட்சிகளை திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026