Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னைத் திரைக்கு அறிமுகம் செய்த தனுஷுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றவுள்ளார் அனிருத். ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். இத்திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானது. அதிலும் ‘வை திஸ் கொலவெறி’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் சக்கைப் போடுபோட்டது. வேற்றுமொழிக்காரர்கள் கூட இந்த பாடலை கொண்டாடினர். அதன் பின்னர் தனுஷ் - அனிருத் கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணியானது.
அனிருத்தைப் போலவே, சிவகார்த்திகேயனையும் திரைத்துறையில் வளர்த்து விட்டவர் தனுஷ் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனுஷ் ஒரு பக்கம் அனிருத்தையும், மறுபக்கம் சிவகார்த்திகேயனையும் வளர்த்துவிட்டார். ஆனால் இவர்களின் கூட்டணி, திடீரென பிரிந்து விட்டது.
தனுஷ், அனிருத் பிரிந்து சென்றது ரசிகர்களுக்கு கவலை அளித்தது. அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தனுஷை பிரிந்த பிறகு, அனிருத் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். சிவாவின் பல திரைப்படங்களுக்கும் அவர் தான் இசையமைப்பாளர். தனுஷ் - அனிருத் கூட்டணி போல, சிவா - அனிருத் கூட்டணியும் வெற்றிக் கூட்டணியாகிவிட்டது. இருப்பினும் தனுஷ் - அனிருத் கூட்டணி மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், நடிகர் வை.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் தனுஷும், அனிருத்தும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதை பார்த்த ரசிகர்கள் அப்படியே படத்திலும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்றார்கள்.
இதனையடுத்து, மிகவிரைவிலேயே, மீண்டும் தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக அனிருத் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இதுபோலவே தனுஷ் - சிவா கூட்டணியும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
35 minute ago
42 minute ago