Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

“இவன் வேறமாதிரி” திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சுரபி, பின்னர் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்திலும் நடித்தார். அழகும் திறமையும் இருந்தாலும், வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு கிட்டவில்லை.
சிறிய இடைவெளிக்குப் பின்னர், “புகழ்” என்ற திரைப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். அந்தத் திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு, தெலுங்கு சினிமாவுக்குச் சென்று, தனக்கான இடத்தைப் பிடித்துவிட்டார். அட்டாக், ஜென்டில்மேன், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.
அடங்காதே என்ற திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வரும் சுரபி, தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகி உள்ள “குறள் 388” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார்.
தெலுங்கில் “வோட்டர்” என்ற தலைப்பில் வெளியாகும் “குறள் 388” திரைப்படமானது, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் 388ஆவது குறளை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது. தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து, தேர்தலுக்குப் பின் அதை மறந்துவிடும் போலியான அரசியல்வாதிகளின் முகத்திரைகளைத் தோலுரிக்கும் கதையே, இத்திரைப்படத்தின் கதையாகும்.

7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026