2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப் போகிறாரா ஆலியா மானசா?

J.A. George   / 2021 நவம்பர் 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் நாயகியாக நடித்து வருகிறார் ஆல்யா மானசா. முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. 

இதனை சஞ்சீவ் மற்றும் ஆல்யா என இருவரும் உறுதி செய்தனர். இந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் நீங்கள் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக போகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆல்யா மானசா இல்லவே இல்லை என பதிலளித்துள்ளார். மேலும் முதல் குழந்தை சிசேரியன் அதைப்பற்றி சொல்லுங்க என கேட்க ஆமாம் எனக்கு முதல் குழந்தை சிசேரியன் செய்து தான் பிறந்தது. 

இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரிக்கு முயற்சி செய்கிறோம் என கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X