Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் பதட்டத்துடன் காணப்படுகிறது.
மேலும் நேற்று உச்சகட்டமாக பெங்களூரில் பஸ்கள் தீ வைக்கப்பட்டு பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் பிறந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
எந்த ஒரு பிரச்சினையையும் சட்டத்தின் மூலமே தீர்வு காணவேண்டும். மனிதத்தன்மையற்ற வன்முறையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பல வலிகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு சட்டத்தீர்வு கிடைக்கும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago