2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

வைரலாகி வருகிறது: என்னவா இருக்கும்?

Editorial   / 2026 மார்ச் 01 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விஜய் திருமண உறவை மீறிய தொடர்பில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

விஜய் சங்கீதா பிரிவா?

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும், அவை வதந்திகள் என்றே ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், அந்த தகவல்கள் மீண்டும் கவனம் பெற்று உள்ளன.
 


நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு

மனுவில், 2021ஆம் ஆண்டிலிருந்து விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு முரணான உறவில் இருப்பதை அறிந்ததாக சங்கீதா தெரிவித்து உள்ளார். இதனால் தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் அந்த உறவு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், தாம் கேள்வி எழுப்பிய பின்னர் வீட்டில் தமக்கான உரிமைகள் குறைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தேவையானபோது இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறி உள்ளது.


 

வைரலாகும் நிவேதா பெத்துராஜின் கமெண்ட்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் “Stifling” என்று ஒரு சொல்லை பதிவிட்டுள்ளார். இந்த ஒரு வார்த்தை பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களையும், ஊகங்களையும் கிளப்பியுள்ளது.

 

என்னவா இருக்கும்?

“Stifling” என்றால் மூச்சுத்திணறச் செய்யும், அடக்கிவைக்கும் அல்லது ஒடுக்கப்படும் உணர்வு எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அவர் இந்த பதிவை எந்தச் சூழ்நிலையில் பகிர்ந்தார் என்பது தெளிவாக தெரியாத நிலையிலும், சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் அரசியல், சினிமா தொடர்பான விவாதங்களுடன் இணைத்து பலரும் இதை புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .