Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது.
படமாக்கப்பட்ட காட்சிகளை ஸ்டூடியோவுக்குக்கொண்டு செல்வதற்கு முன்பே அதன் வியாபாரத்தை முடித்துவிட்டது மாஸ்டர் திரைப்படத்தைத் தயாரிக்கும் XB Film Creators நிறுவனம்.
விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் அதி தீவிரமான வேகத்துடன் நடைபெற்று வருகிறது.
கடைசிக் கட்ட ஷூட்டிங்கில் அதிரடி சண்டைக் காட்சிகள் பலவற்றை படமாக்க முடிவெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதற்குத் திட்டமிட்டதைவிட அதிக பணம் செலவாகும் என முன்கூட்டியே தயாரிப்பு தரப்பிடம் தெரிவித்துவிட்டதால், படம் தயாராகும் வரை காத்திருக்காமல் படத்தின் பிசினஸைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
அமெரிக்கா, கனடா, துபாய், இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் United india exporters & Malik Stream Corporation நிறுவனம் விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறது.
தமிழகத்தின் விநியோகப் பகுதிகளில் நிர்ணயித்த விலைக்குப் பேரம் பேசாமல் கேட்டவர்களுக்கு உடனடி விற்பனையைச் செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
மாஸ்டர் திரைப்படத்தின் ரிசல்ட் மெகா ஹிட் என்பதை இப்போதே அறிந்ததால், அடுத்த திரைப்படத்துக்கு இந்திய சினிமாவிலேயே இல்லாத அளவுக்கு விஜய் சம்பளம் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதால், இந்தத் திரைப்படத்தினை வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
37 minute ago