2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

மாணவர்களை சந்திகிறார் விஜய்

Freelancer   / 2023 ஜூன் 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

 இந்நிலையில், பத்து மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்படது.

 

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஜூன் 17 ஆம் திகதி சென்னை நீலாங்கரையில் விஜய் சந்திக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .