Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு படங்களில் கவர்ச்சிப் பாவையாக வலம் வந்து அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த சனா கான், அண்மையில் வெளிவரவுள்ள "ஆயிரம் விளக்கு" படத்தில் பாவாடை, தாவணியில் பாந்தமாக வருகிறாராம். தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி முத்திரையால் சனாவுக்கு சற்றே விசனமாம். இந்நிலையில், "கதையையும், கவர்ச்சியையும் இங்குதான் பிரித்துப் பார்க்கிறார்கள். மாடர்ன் டிரஸ்ஸில்தான் கவர்ச்சி காட்ட முடியும் என்றில்லை. புடவையிலும் கூட கவர்ச்சியாக வந்து போகலாம்" என்கிறார் சனா கான்.
"கவர்ச்சி நடிகை, கேரக்டர் நடிகை என்றெல்லாம் மும்பையில் இப்படிப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். கதையையும், கவர்ச்சியையும் அங்கு ஒன்றாகவே பார்ப்பார்கள். இங்குதான் கவர்ச்சி நடிகை என்று தனி முத்திரை குத்துகிறார்கள் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
"நான் கவர்ச்சி நடிகை அல்ல. கதையுடன் கூடிய கவர்ச்சியில்தான் நான் நடித்துள்ளேன். ஆயிரம் விளக்கு படத்தைப் பார்த்தால் இது புரியும் என்று கூறியுள்ள அவர் கவர்ச்சிகரமான டிரஸ் மட்டும்தான் ஒரு நடிகையை கவர்ச்சியாக காட்டும் என்றில்லை. சாதாரண புடவையில் கூட கவர்ச்சியாக வலம் வர முடியும். ஏன்? ஸ்ரீதேவி, ஹேமமாலினி ஆகியோர் புடவையில் கவர்ச்சியாக நடிக்கவில்லையா? எல்லாம் பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது என்று பொருமித்தள்ளியுள்ளார் சனா கான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
39 minute ago
1 hours ago