2025 மே 21, புதன்கிழமை

'கபாலி' Vegetable Briyani

Gavitha   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படம் வருகிற நாளை மறுநாள் (22) உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகளவில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை எந்த சினிமாவுக்கும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் விளம்பரங்களும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

'கபாலி' படத்தின் ஏர்-லைன் பார்ட்னராக கைகோர்த்துள்ள ஏர்-ஏசியா விமான நிறுவனம், 'கபாலி' படத்தின் போஸ்டரை தனது நிறுவன விமானம் ஒன்றில் ஒட்டி, ஆகாயம் வரை 'கபாலி'யின் புகழை பறைசாற்றியுள்ளது.

அடுத்ததாக மலேசியாவின் பிரபல ஹொட்டல் ஒன்றில் 'கபாலி' பெயரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவையும் தாண்டி ஒரு தமிழ் படத்துக்கு வெளிநாடுகளில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது 'ரஜினி' என்ற ஒரு மாபெரும் மனிதருக்காக மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .