Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த “புலிமுருகன்” திரைப்படம், அண்மையில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல், உலகம் முழுவதும் இந்திய ரூ.50 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் அல்லது டப்பிங் செய்யப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மோகன்லாலின் “த்ரிஷயம்” கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது போல, இந்த திரைப்படமும் ரீமேக் செய்யபடவுள்ளதாகவும், இந்த திரைப்படத்தின் அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமையையும் மிகப்பெரிய தொகை கொடுத்து “அபிஷேக் பிலிம்ஸ்” என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மிக விரைவில், தமிழ் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “த்ரிஷ்யம்” தமிழ் ரீமேக்கில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்தது போல் “புலிமுருகன்” தமிழ் ரீமேக்கி லும் அவர் நடிப்பாரா?.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
1 hours ago