2025 மே 21, புதன்கிழமை

மீண்டும் சர்ச்சையில் காவ்யா மாதவன்

A.P.Mathan   / 2010 ஜூலை 26 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காசி, என் மன வானில், சாது மிரண்டால் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதினை வென்ற மலையாள நடிகை காவ்யா மாதவன், கடந்த வருடம் குவைத்தில் பணிபுரியும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறினார்.

சீரான குடும்ப வாழ்க்கையை அனுபவித்துவந்த காவ்யா, திடீரென தனது கணவன் மீது புகார் கூறியிருந்தார். அதன் பின்னர் இந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காவ்யாவின் கணவர் தன்னையும் தனது குமும்பத்தினரையும் அவதூறாக காவ்யா பேசித்திரிவதாக அவர்மீது வழக்குத் தொடர்ந்து, காவ்யாவை பகிரங்க மன்னிப்புக் கேட்கும்படி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்த விடயத்தில் கடுப்பாகிய காவ்யா, மீண்டும் கணவன் மீது புகார் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார். கணவர் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து தன்னை உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார்.

ஓய்ந்துபோய்விட்டதென நினைத்த காவ்யாவின் பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியதில் காவ்யாவை ஒப்பந்தம் செய்த திரையுலகம் கலங்கிப்போயிருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0

  • fanaa Tuesday, 27 July 2010 02:13 AM

    ஐயோ பாவம்

    Reply : 0       0

    siva Saturday, 14 August 2010 05:13 PM

    ஹ்ம்ம் அவருக்கு கொடுத்து வைக்கல .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .