Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
"காவலன் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் படங்களில், இது வித்தியாசமான படமாக இருக்கும். மலையாளத்தில் இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. என்னை, நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்" என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் வெற்றிபெற்ற "பாடிகார்ட்" என்ற மலையாள படம், 'காவலன்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. "பாடிகார்ட்" படத்தில் திலீப் - நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார்கள். சித்திக் அந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.
"காவலன்" படத்தில், விஜய் - அசின் ஜோடியாக நடிக்கிறார்கள்."பாடிகார்ட்" படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று முந்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் "காவலன்" படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அசின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது விஜய் கருத்து தெரிவிக்கையில் "இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்னிடம் கூறினார். என் வழக்கமான படங்களில் இருந்து இது மாறுபட்ட கதை. இது, காதல் படம். அதிரடியான சண்டை காட்சிகளும் இருக்கும். மனம்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இருக்கும்.
சித்திக் இயக்கத்தில், ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. இப்போது பார்த்தாலும் சிரிப்பேன்.
அசின் இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். சிறந்த நடிகை அவர். எங்கள் கூட்டணியில் மூன்றாவது படம். கடந்த இரண்டு படங்களைப்போலவே இந்த படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன்" என்றார்.
Ris Wednesday, 14 December 2011 02:16 PM
Kalakkittinga captain
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
26 minute ago
1 hours ago