Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் பிரமாண்ட படங்கள் வரிசையில் உருவாகிவரும் படம் 'வானம்'. சிம்பு, பரத், அனுஷ்கா, சிநேகா உல்லலா, சோனியா அகர்வால் போன்ற பிரபலங்களின் கூட்டில் 'வானம்' உருவாகியிருக்கிறது.
'வானம்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்திரைப்படத்தின் விளம்பர நடவடிக்கைகளிலும் பின்னணி வேலைகளிலும் திரைப்பட குழு இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 18ஆம் திகதி மிக பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டினை நடத்த தீர்மானித்திருக்கிறார்.
'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இசை வெளியீடு லண்டனின் பிரமாண்டமாக நடைபெற்ற முதலாவது தமிழ் திரைப்பட இசை வெளியீடாகும். இப்பொழுது 'வானம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டினையும் லண்டனில் நடத்த உத்தேசித்துள்ளார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு 'செங்கம்பள' வரவேற்று வழங்கப்படவுள்ளது. பரத், அனுஷ்கா, சோனியா அகர்வால், யுவன்சங்கர் ராஜா போன்ற பிரபலங்களும் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்லவுள்ளனர். சிம்பு ஏற்கனவே லண்டனின் 'போடா போடி' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் அங்கிருந்தே கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிரிஷின் இயக்கத்தில் உருவாகும் 'வானம்' திரைப்படம் தமிழ் சினிமாவுலகில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவருமென அப்படத்தின் தயாரிப்பாளர் 'விரிவி' கணேஷ் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025