2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குத்துச்சண்டை வீராங்கனையான த்ரிஷா...

Menaka Mookandi   / 2012 ஜூன் 13 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பூலோகம். இந்த திரைப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பைப் பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் 'லேடி பாக்ஸர்' (குத்துச்சண்டை வீராங்கனை) என்று பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார்.

உனக்கும் எனக்கும் திரைப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் திரைப்படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிஷாவிற்கு வலுவான கதாபாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது,

'பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு பலமே நான் தான்' என்று கூறியுள்ளார்.

ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் பூலோகம் திரைப்படத்தை நவம்பர் 15ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X