2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமன்னாவின் ராசிக்கு பயந்து ஓடும் நடிகர்கள்...

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் திரையுலகில் குறிப்பிட்ட சில காலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் வாய்ப்புக்கள் குறைந்துள்ளன. இருப்பினும் தெலுங்குத் திரையுலகில் அவருக்கு வாய்ப்பு மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதாம்.

அதனால் கை நிறைய தெலுங்குத் திரைப்பட வாய்ப்புக்களை வைத்துள்ள தமன்னா, விளம்பரங்களிலும் வாய்ப்புக்களை அள்ளி குவித்து வருகின்றாராம். இவ்வாறாக, முன்னணி நிலையில் உள்ள தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றாலே திருமணமாகாத இளம் நடிகர்கள் பயந்து ஓடுகிறார்களாம்.

அவர்களின் பயத்திற்கு காரணம் உள்ளது. தமன்னாவுடன் தெலுங்கில் ஜோடி சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா மற்றும் தமிழில் கார்த்தி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் தமன்னாவுக்கு கல்யாண ராசி என்றும், அவருடன் நடித்தால் திருமணமாகாத நடிகர்களுக்கு விரைவில் திருமணமாகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

நிறைய திரைப்படங்களில் நடித்து பெயரும், புகழும் வாங்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இளம் நடிகர்கள் தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றால் பயப்படுவதற்கு இந்த கல்யாண ராசி தான் காரணமாம்.






You May Also Like

  Comments - 0

  • rabsan Monday, 02 July 2012 02:17 PM

    தமன்னாவை எனக்கு பிடிக்காது - ஹன்சா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X