2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜயின் துப்பாக்கிக்கு நீதிமன்றம் தடை...

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு 'கள்ளத் துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி திரைப்படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது. இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X