2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா பர்பி படம் மூலம் பொலிவூட்டில் அறிமுகமாகிறார். நீண்ட காலமாக எடுக்கப்பட்ட பர்பி ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி அந்த திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகை இலியானா போக்கிரி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டுக் கழித்துள்ளார். தெலுங்கு போக்கிரியில் நடித்த இலியானா அதன் இந்தி ரீமேக்கில் சல்மானுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இது குறித்து இலி கூறுகையில், 'தெலுங்கு போக்கிரியில் நான் நடித்தேன். அதன் பிறகு அதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை அணுகினர். நான் தான் மறுத்துவிட்டேன். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன்.

அப்போது நான் பொலிவூட்டில் நுழைய தயாராக இல்லை. பாதி மனதோடு நடிக்க வேண்டாமே என்று நினைத்து தான் வாண்டட்டில் நடிக்கவில்லை.

ஆனால் அந்த திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருப்பினும் வருத்தமில்லை. பர்பி மூலம் பொலிவூட்டில் நுழைகிறேன். சல்மானுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X