2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கதாநாயகி அந்தஸ்தை பறிக்குமா திருமணம்?: சினேகா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை சினேகா நடித்திருக்கும் திரைப்படம் 'ஹரிதாஸ்'. இதில் கிஷோரின் ஜோடியாகவும், பத்து வயது சிறுவனின் தாயாகவும் நடித்திருக்கிறார் சினேகா.

இதுபற்றி அவர் கூறியதாவது,

'ஹரிதாஸ்' திரைப்படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் என்னை சந்தித்து இந்தக் கதையை சொல்லி நடிக்க முடியுமா என்று கேட்டார். கதை எனக்கு பிடித்திருந்த போதும். அப்போது என் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால் திருமணம் செய்யப்போகிறேன். அந்த ஏற்பாட்டில் இருக்கிறேன் என்றேன்.

அதற்கு அவர், 'நான் காத்திருக்கிறேன்' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் தமிழ் நாட்டில் நடிகைகளுக்கு திருணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு ஹீரோயின் தகுதி போய்விட்டதாகத்தான் நினைப்பார்கள். யாரும் ஹீரோயினாக நடிக்க அழைக்க மாட்டார்கள். அக்கா அண்ணி கதாபாத்திரத்துக்குத்தான் அழைப்பார்கள்.

ஆனால் என்னை தைரியமாக அழைத்தார்கள். அதற்காகவே நான் இந்தப் திரைப்படத்தில் நடித்தேன். இதில் நடித்த சிறுவன் பிருத்விராஜ் என் மகனைப்போலவே உணர்ந்து நடித்தேன். இனி வரும் திரைப்படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன்.

அக்கா, அண்ணி கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். அதுவே திரைப்படத்தின் முதல் முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் ஹரிதாஸ் என் கேரியரில் முக்கியமான திரைப்படமாக இருக்கும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .