2025 மே 19, திங்கட்கிழமை

விபசாரியாகிய ஸ்ருதி

A.P.Mathan   / 2013 மே 16 , மு.ப. 04:53 - 13     - {{hitsCtrl.values.hits}}


தந்தை தனது நடிப்புக்காக எவ்வளவுதூரம் அர்ப்பணிப்பாக இருக்கின்றாரோ, அதேபோல் மகள் ஸ்ருதியும் தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டார். அண்மையில்கூட ஓர் ஆண்கள் சஞ்சிகைக்கு மிக ஆபாசமாக போஸ் கொடுத்திருந்தார். இப்பொழுது ஹிந்தியில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் டி-டேய்ஸ் என்ற படத்தில் பாகிஸ்தான் விபசாரியாக நடித்திருக்கிறார்.
 
நிகில் அத்வானியின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ரம்பால் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இத்திரைப்படம் யுத்த உளவு பின்னணியைக் கொண்டது. டி-டேய்ஸ் என்பது அதனைத்தான் குறிக்கும். இரண்டாம் உலகப் போரின்போது நாசிப் படைகளின் ஊடுருவலை டி-டேய்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். டி-டேய்ஸ் என்பதன் பதம் உளவுப்போர் என்பதுபோல் அமைகின்றது.
 
இந்த யுத்தப் பின்னணியில் உருவாகும் டி-டேய்ஸ் படத்தில் பாகிஸ்தான், கராய்ச்சியில் வாழ்கின்ற விபசாரியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் எதிர்வரம் ஜூலை மாத்தில் திரைக்கு வரவிருக்கிறது.
 
இத்திரைப்படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி கூறுகையில்...
 
“ஸ்ருதி ஹாசன் இப்படியான ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டமை எனக்கு வியப்பாக இருந்தது. 3 படத்தில் அவரது தத்ரூபமான நடிப்பைப் பார்த்து நான் அசந்துபோயிருந்தேன். அதன் ஈர்ப்பினால்தான் இப்படத்தில் அவரை நடிக்குமாறு கேட்டபோது அவரும் உடனே ஒத்துக்கொண்டார். ஸ்ருதியின் வாழ்வில் இத்திரைப்படம் ஒரு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்று குறிப்பிட்டார்.
 
ஸ்ருதியின் கவர்ச்சி மழையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினைப் பார்ப்பதற்கு ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை காத்திருக்கவேண்டும். இப்போதைக்கு இந்த ஸாம்பில் படங்களை மாத்திரம் பாருங்கள்...!!!







You May Also Like

  Comments - 13

  • husain Mohamed Thursday, 16 May 2013 05:40 AM

    ஒரு பெண்ணின் உடம்பை ஆண்கள் பார்த்து ரசிப்பது பெண் உரிமையா?

    Reply : 0       0

    niyas Thursday, 16 May 2013 08:10 AM

    நல்ல அப்பன் நல்ல மகள்... வாழ்க கலாசாரம்...

    Reply : 0       0

    Anban Thursday, 16 May 2013 08:55 AM

    மகாநதி கமல்ஹாசன் இப்பவும் தன மகளைக் காப்பாற்றுவாரா...?

    Reply : 0       0

    PANDARI Thursday, 16 May 2013 07:55 PM

    கமல் செய்த வேலையை மகள் செய்கின்றாள்... அது தப்பா..???

    Reply : 0       0

    aizaad Friday, 17 May 2013 02:43 AM

    இங்கு கருத்துச் சொல்லும் இழவுகள் எல்லாமே பெண்ணுடலை ரகசியமாக ரசிப்பவைதான். போலியாக வாழ்வதிலேயே பிரியப்பட்டவர்கள்.

    Reply : 0       0

    Anban Sunday, 19 May 2013 04:39 AM

    ரசிப்பதில் தவறில்லை.. அனுபவிக்க நினைப்பதே தப்பாகும் !!!

    Reply : 0       0

    umpire Sunday, 19 May 2013 07:48 AM

    பார்த்தோமா போனோமோ எண்டு இருக்கணும்... சும்ம கொம்மென்ட் பண்ண கூடாது...

    Reply : 0       0

    பழைய செருப்பு Sunday, 19 May 2013 01:12 PM

    ஆமா ஆமா தப்புங்க - காட்டுறாங்களே பிரதர் ,,,,,,,,,,, அதனாலே பார்கிரான்களே பிரதர்

    Reply : 0       0

    aizaad Monday, 20 May 2013 02:56 AM

    இது நகல் விம்பங்களினால் கட்டமைக்கப்பட்ட நுகர்வுக் கலாசார உலகு. இங்கு ஒழுக்கம் காலாவதியாகிவிட்டது. மனிதனை மகிழ்விக்காத பண்பாடு, உணவு கழிவாவது போலாகிவிடும். நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நடைமுறை உலகோ மாறிக் கொண்டிருக்கிறது.
















    க்8ஈ

    Reply : 0       0

    Kumar Wednesday, 22 May 2013 04:23 AM

    இதுதான் இந்து கலாசாரமா?

    Reply : 0       0

    haflan Wednesday, 22 May 2013 11:53 AM

    வாழ்க‌

    Reply : 0       0

    aizaad Thursday, 23 May 2013 07:19 AM

    கலாசாரம் என்பது அதிகார சக்திகள் வலியுறுத்துகின்ற போலி எண்ணக்கரு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்றைய தகவல் தொடர்பு யுகம் என்பது சமூக நம்பிக்கைகளை தகர்த்துவிட்டது. இனி விம்பங்களின் துரித பெருக்கத்தின் மூலம் அமைகின்ற புலப்பாடுகள்தான் நமது கலாசாரம். அதுவும் தற்காலிகமானதுதான்.

    Reply : 0       0

    sazna Sunday, 09 June 2013 03:33 PM

    தமிழ் வாழ்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X