2025 மே 19, திங்கட்கிழமை

சாமியாராகிய சிம்பு...

A.P.Mathan   / 2013 மே 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எப்பொழுதும் பரபரப்பாக பேசப்படுகின்ற நடிகர் சிம்பு இப்பொழுது ஆன்மீகத்தின் பக்கம் தனது பார்வையை திருப்பியிருக்கிறாராம்.
 
“எனக்கு தேவையான பணம், புகழ், ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். என் வாழ்வின் அடுத்த பக்கத்தை வாழ விரும்புகிறேன்” என்று கூறி இமயமலைப் பக்கம் காவி வேட்டி, உருத்திராட்சக் கொட்டையுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாராம் சிம்பு..!!
 
காதல் கிசு கிசுக்களில் கொடிகட்டிப் பறந்த சிம்புவா காவி வேட்டியுடன் சாமியார்போல் திரிகிறார் என்று திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துபோயுள்ளதாம்.
 
ரஜினி எவ்வளவுதான் பிரபல்யமாக இருந்தாலும் நடைமுறையில் ரொம்ப எளிமையானவர். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடும் கொண்டவர். இதே பாணியைத்தான் இப்பொழுது சிம்புவும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறாராம்.
 
இமயமலைக்கு சென்றது மட்டுமல்லாமல் சில பிரபலமாக சித்தர் குகைகளில் உட்கார்ந்து தியானமும் பண்ணியிருக்கிறாராம். போகிற போக்கைப் பார்த்தால் முழுநேர சாமியாரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!!!

You May Also Like

  Comments - 0

  • ruwini Wednesday, 29 May 2013 07:07 AM

    இந்த வேஷம் தான் பெண்களை ஏமாற்றுவதற்கு லேசான வேஷம்... வாழ்க சிம்பு...

    Reply : 0       0

    raj Wednesday, 05 June 2013 08:59 AM

    சிம்பு நல்ல நடிகர்தான் ஆனால் ஆன்மீகத்திலும் ரஜினியை பின்பற்ற வேண்டிதில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X