2025 மே 19, திங்கட்கிழமை

அமலாவின் டெக்னிக்...

Menaka Mookandi   / 2013 ஜூன் 26 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மைனா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் அமலா பால். விதார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த முதல் திரைப்படத்திலேயே தனது திறைமையை வெளிக்கட்டி 'அடடா பொண்ணு நல்லா நடிக்கிறதே...!' என்று அனைவரும் பாராட்டும் அளவுக்கு பெயர் பெற்றார். இதனால், அவருக்கு வாய்ப்பளிக்க பலரும் முன்வந்தனர்.

இடையே வாய்ப்புகள் குறையவே அவர், தெலுங்கு திரைப்பட உலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  இந்நிலையில் அவருக்கு தமிழ்த் திரையுலகம் மீண்டும் வாய்ப்பளிக்க முன்வந்த நிலையில், முன்னணி ஹீரோவான விஜய்யுடன் 'தலைவா' திரைப்படத்திற்கு தெரிவானார்.

விஜய்யுடன் நடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக அஜீத், சூர்யா ஆகியோருடனும் நடிக்கும் வாய்ப்புக்களைத் தட்டிச்சென்றுள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'துரவ நட்சத்திரம்' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடி சேர்கிறார் அமலா பால். அடுத்ததாக அஜீத்துடன் நடிப்பதற்கான வாய்ப்புக்களும் அவருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X