2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தமன்னா அரசியலுக்கு வந்தால்...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமன்னா அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரிவித்துள்ளார். தமன்னா அஜீத் குமார் ஜோடியாக வீரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவரது கையில் தற்போதைக்கு தமிழ் திரைப்படங்கள் கைவசம் இல்லை. அவருக்கு பொலிவூட்டில் ஒரு ரவுண்ட் வர ஆசையுள்ளதாம்.
 
தற்போது அவர் வசம் 2 இந்தி திரைப்படங்களும், ஒரு தெலுங்கு திரைப்படமும் உள்ளது. உடற்பயிற்சி, டயட், நடனம் ஆகியவை தான் தனது அழகின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. ஐஸ்வர்யா ராய் மாதிரி நடனம் ஆட வேண்டும், சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று தமன்னா ஆசைப்படுகிறார்.

தமன்னா அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு ஏராளமான கழிவறைகள் கட்டுவாராம். தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டங்கள் கொண்டுவருவாராம். சாலையில் குப்பையைப் போடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பாராம். கடவுள் மட்டும் வரம் கொடுத்தால் அடுத்த பிறவியில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தாக பிறக்க தமன்னாவுக்கு ஆசையாம்.







  Comments - 0

  • najath Monday, 26 August 2013 07:42 AM

    அவங்க உடுப்ப மாத்தின‌ா நல்லம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .