2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கவர்ச்சிக்கு ரெடியான தலைவா நாயகி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 01 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிவூட் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை ராகினி நந்தவானி, விஜய்யுடன் 'தலைவா' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

தலைவா திரைப்படத்தில் இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரைத்தேடி வருகின்றனவாம்.

இது குறித்து அவர் கூறியதாவது, 'தலைவா' திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். திரைப்படத்தை பார்த்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இப்படத்தில் நான் நடித்த நிறைய சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. திரைப்படம் பார்த்தபோது வருத்தமாக இருந்தது.

கதைக்கேற்ற கவர்ச்சி அவசியமானது. எனவே, திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடிப்பேன். தமிழ், தெலுங்கு மொழிகளை கற்று வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்' என்று கூறியுள்ளார் ராகினி.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .