2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கதிகலங்க வைத்த நஸ்ரியா...

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கோலிவூட்டில் படுவேகமாக வளர்ந்து வருகிறார். கால்ஷீட்டை சொதப்பியும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறதாம்.

அதுவும் சும்மா இல்லை அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள். நஸ்ரியாவின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் கதிகளங்கிப்  போயுள்ளார்களாம்.

தனுஷ் நடிக்கும் நையாண்டி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா தான். அட்டகத்தி ரஞ்சித், கார்த்தியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் நஸ்ரியா ஜோடி சேர்ந்துள்ளார்.

நீ நல்லா வருவடா என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா. விஜய் ஜில்லா திரைப்படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

அதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.






  Comments - 0

  • ananth Saturday, 03 May 2014 07:35 AM

    எனக்கு நஸ்ரிய ரொம்ப பிடிக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .