2025 மே 19, திங்கட்கிழமை

விராட் கோலி – தமன்னா ரகசிய திருமணம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும் பிரபல நடிகை தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஹிம்மத்வாலா திரைப்படம் மூலம் இந்திக்கும் போனார்.

தற்போது தமிழில் வீரம் திரைப்படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற இந்தி திரைப்படத்திலும் ஏகடு என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தமன்னாவும் வீராட்கோலியும் விளம்பர திரைப்படமொன்றில் சேர்ந்து நடித்தார்கள்.அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து நட்போடு பழகி வந்தனர். தற்போது அது காதலாக மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் வட மாநிலத்தில் பிரபல கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்துவிட்டதாகவும், வீரம் படப்பிடிப்பு முடிந்தவுடன் திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கிசுகிசுவால் நடிகர் அஜீத் உட்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் வெற்றியை இந்த கிசுகிசு பாதிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

இந்த செய்தியை தமன்னா மற்றும் வீராட் கோஹ்லி இருவருமே மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்தவும் இல்லை. திருமணம் முடிந்துவிட்டதா? அல்லது வெறும் வதந்திதானா என்பது இருவரில் யாராவது ஒருவர் ஊடகங்களில் தோன்றி தெளிவுபடுத்தினால் தான் உண்மை விளங்கும்.





You May Also Like

  Comments - 0

  • N.M.Afrar Tuesday, 03 June 2014 05:05 AM

    வாழ்த்துக்கள்.................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X