2025 மே 19, திங்கட்கிழமை

கார்த்திகாவுக்கு மாப்பிளை பார்க்கும் படலம் நிறுத்தம்...

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயற்கை, பேராண்மை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் 'புறம்போக்கு' என்ற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனும் தயாரிக்கிறார்.

இரண்டு ஹீரோக்கள் உள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக 'கோ' திரைப்படத்தில் நடித்த நடிகை கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோக்கள் இரண்டானாலும் படத்தின் ஹீரோயின் ஒருவர்தானாம். இதனால் கார்த்திகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் குல்லுமணாலியில் தொடங்குகிறது. கார்த்திகா தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து 'டீல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்குப் பிறகு வேறு திரைப்படங்களே இல்லாமல் இருந்தார்.

எனவே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் கார்த்திகாவின் அம்மா நடிகை ராதா. இப்போது பெரிய திரைப்பட வாய்ப்பு வந்திருப்பதால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம் ராதா.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X