2025 மே 19, திங்கட்கிழமை

பாவனாவுக்கு டும்... டும்... டும்...!

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிணிகமானவர் பாவனா. அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை பாவனா, கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
 
தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்குப் பக்கம் போன பாவனா, அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் சிரமப்பட்டார். கடைசியாக கன்னட திரைப்படவுலகில் தஞ்சம் புகுந்தார்.

அங்கு சில திரைப்படங்களில் நடித்தார். இப்போது மைத்ரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் மலயாளத்தில் நான்கு திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.

கன்னட திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த போது பாவனாவுக்கு, நவீன் என்ற கன்னட திரைப்பட அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள்.

பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து பாவனா - நவீன் திருமணம் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. திருமணம் கேரளாவில் நடத்துவதா? அல்லது பெங்களூரில் நடத்துவதா? என்பது பற்றி இரு தரப்பினரது பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X