2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நயனுடன் மோதிய ரவி...

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் மரத்தை சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு மட்டும் பாடிவிட்டு செல்ல மாட்டாராம். மாறாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம்.

இத்திரைப்படத்தில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் வெறியோடு மோதியவர்கள் வேறு யாரும் இல்லை ஹீரோ ரவியும், ஹீரோயின் நயன்தாராவும் தான். போங்க ரவி, இப்படி நயன் கூடவா ஆக்ரோஷமாக மோதுவது.

முன்னதாக ஆதிபகவன் திரைப்படத்தில் நீத்து சந்திராவுடன் மோதும் காட்சியில் நடித்த அனுபவம் நயன்தாராவுடன் மோதும் காட்சியில் உதவியாக இருந்ததாம் ரவிக்கு.

இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளார். மீண்டும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நண்பேன்டா திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .