2025 மே 19, திங்கட்கிழமை

அஞ்சலியை காணவில்லை

Menaka Mookandi   / 2014 மார்ச் 17 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவிலிருந்தும் சென்னையிலிருந்தும் காணாமல் போய் ஆந்திராவில் வாசம் புரிந்து வந்த நடிகை அஞ்சலி, அங்கிருந்தும் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி, சித்தி கொடுமை என்று ணிறைப்பாடு செய்துவிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலிருந்து மாயமானார்.

தன் சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் மீது சொத்துக்களை அபகரிக்க முயற்சி, துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு ணிறைப்பாடுகளைக் கூறினார்.

சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், பின்னர் ஹைதராபாத் பொலிஸில் ஆஜரானார். அதன் பிறகு ஹைதராபாத்திலேயே தங்கி இருந்தார். சென்னையில் நடக்கும் அவர் தொடர்பான வழக்குகள் ஒன்றில்கூட நேரில் ஆஜராகவில்லை.

முன்பு போல் திரைப்படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடிவிட்டதாகவும், தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அண்மைக் காலமாக அஞ்சலியை ஹைதராபாத்திலும் காணவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன.

கையடக்கத் தொலைபேசி செயலற்ற நிலையில் உள்ளது. தெலுங்கு திரையுலகினரால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம். சென்னையில் உள்ள அவரது தொடர்பாளர்களும், அஞ்சலியுடன் பேசியே நாளாகிவிட்டது என்கிறார்கள்.

இரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக ஒரு தரப்பும், அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என இன்னும் சிலரும் சொல்கிறார்கள்.

ஆனால் எதுவுமே உறுதியான தகவல் இல்லை. எனவே மீண்டும் அஞ்சலியைத் தொடர்ந்து தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது. அஞ்சலிக்குத் துணையாக ஆந்திராவில் இருந்த சிலர் ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X