2025 மே 19, திங்கட்கிழமை

ரஜினி வழியில் அஜித்...

Menaka Mookandi   / 2014 மார்ச் 21 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐயாயிரம் ரூபாய் தையல் இயந்திரம் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார் விஜயகாந்த். நலிந்தவர்களுக்கு உதவி செய்வதிலும் பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் நடிகர் அவர்.

இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி. உதவி செய்வதில் விஜயகாந்தின் வழியையே விஜயும் பின்பற்றுகிறார்.

எந்தவொரு உதவியைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் விஜய். பத்து ரூபாய் நோட்புக் கொடுப்பதைக் கூட பத்திரிகையாளர்களை அழைத்துத்தான் கொடுப்பார்.

சில மாதங்களுக்கு முன் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 இலட்சம் கொடுத்ததும் இப்படிப்பட்ட பப்ளிசிட்டி ரகம்தான் விஜய். 

ஆனால், எத்தனை இலட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இளம் தலைமுறை நடிகர்களில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அஜித், ரஜினிகாந்த் மாதிரி.

தன் வருமானத்தில் பெரும்பகுதியை நலிந்தவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி வருகிறார் அஜித். உதவி பெறுபவர்களுக்கே இது அஜித் செய்த உதவி என்று தெரியாமலே ஏராளமான பேருக்கு உதவிகளை செய்திருக்கிறார் அஜித்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அஜித், தன்னிடம் பணிபுரிபவர்களை மட்டும் சும்மாவிட்டுவிடுவாரா என்ன?

கேளம்பாக்கம் அருகில் 12 கிரவுண்ட் நிலத்தை வாங்கி, தன்னிடம் வேலை பார்க்கும் 12 பேருக்கு கொடுத்ததோடு, அந்த நிலத்தில் தன் செலவிலேயே வீடும் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமே வாங்கிக் கொண்டாராம்.

விஜய்யோ தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் வாடகை வாங்கிக் கொண்டுதான் வீடு கொடுத்திருக்கிறாராம். அஜித் இந்த விடயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது.


You May Also Like

  Comments - 0

  • suna pana Sunday, 23 March 2014 01:15 PM

    Epade athuna par thuvagkitegka. Apa apade ungkalukku entha news kedahsathu.

    Reply : 0       0

    VIJAY Sunday, 23 March 2014 01:17 PM

    அப்படின்னா வீடு கட்டி கொடுக்கும் இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரிந்தது....... ?

    Reply : 0       0

    rockey Sunday, 23 March 2014 01:21 PM

    Apram ebdi ungaluku therinjadhu

    Reply : 0       0

    kumat Sunday, 23 March 2014 03:20 PM

    Nice..... intha mathiri nadikar kal irunthal nam naatil election nay theva illa....

    Reply : 0       0

    ashok Monday, 24 March 2014 09:13 AM

    தல டா... வாழ்க...

    Reply : 0       0

    siva Thursday, 03 April 2014 09:48 AM

    தல வாழ்க

    Reply : 0       0

    mohamed Friday, 04 April 2014 07:20 PM

    இதுவும் ஒருவகை பப்லிசிடி தானே..!!! இதை நீங்களே விளம்பரப்படுத்துகிறீர்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X