2025 மே 19, திங்கட்கிழமை

சிம்புவை கடுப்பேற்றும் ஹன்சிகா

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் காதலரான சிம்புவை ஹன்சிகா கடுப்பேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளதுடன் காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சிம்புவை பிரிந்த பிறகு ஹன்சிகா தனது படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ள நிலையில்  ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுடன் சேர்ந்து மீகாமன் படத்தில் நடித்து வரும் ஹன்சிகா ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை ரசிகர்களுக்காக அல்ல சிம்புவை கடுப்பேற்ற தான் ட்விட்டரில் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.






திருமணம் இல்லை: குழந்தை உண்டு: ஜாக்குலின்

பிரபலமான இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்திய பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் குழந்தைகளை வளர்ப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நான் இலங்கையில் பிறந்தவள் என்பதால் பல்வேறு கலாசாரங்களைப் புரிந்துகொள்ள உதவியது. மிக முக்கியமாக, வௌ;வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை உணர்த்தியது.

நான், பல்வேறு கலாசாரங்களையும், மொழிகளையும் அறிவதில் ஆர்வம் கொண்டவள். அதனால்தான், பல்வேறு இனங்களின் அருமையான கூட்டணியாக உள்ள இந்தியாவில் என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இந்திய படங்களிலும் நடிக்க முடிகிறது.

நான் இலங்கையிலேயே வேலை பார்க்கவேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். நான் இதழியல் பயின்றவள் என்பதால், சிறிதுகாலம் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். எனது அத்தை பிரெட்ரிக்கா ஜேன்ஸ் இலங்கையில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். எனவே அவரின் கீழ் நான் எனது பணியை தொடங்கினேன்.

ஆனால் வேறு விதமாக நினைத்த விதி, என்னை சினிமாவில் கொண்டுவந்து சேர்த்து விட்டது. இதுவும் நல்ஷ விஷயம்தான். நாம் எதில் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறமோ அதில் நமது திறமையை காண்பித்து நன்றாக வாழவேண்டும். அது என்னால் முடிகிறது.

திருமணம் பற்றி எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டு. திருமண விகிதத்தை விட விவாகரத்து விகிதம் அதிகம் உள்ள காலத்தில் நாம் வாழ்கிறNhம். இது, திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்ற வாக்கியம் குறித்தே ஐயம் எழுப்புகிறது.

எனது பெற்றறோர் 30 ஆண்டு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கடந்திருந்திருக்கிறார்கள். அவர்களைப் போல வாழ வேண்டும் என்று எனக்கு ஆசையுண்டு. ஆனால் இன்றைக்கு அது நீளமானதாகத் தெரியும்.

ஒரு விஷயம் உறுதி, நான் திருமணம் செய்தாலும், செய்துகொள்ளாவிட்டாலும் நிச்சயம் குழந்தைகளை வளர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

சிம்பு, நயன் மீண்டும் காதல்?

2006இல் வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்


சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் கட்டிப்பிடித்து 'போஸ்' கொடுத்தனர். இது அவர்கள் தங்கள் பழைய காதலை புதுப்பித்து கொண்டதை பறைசாற்றுவது போல் இருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் சமீபத்தில் நடந்த நடிகை திரிஷாவின் பிறந்தநாள் விருந்து நிழ்ச்சியில்தான் இது நடந்தது. நயன்தாரா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் விருந்துக்கு வந்து இருந்தனர். திடீரென சிம்புவும் வந்தார்.

நயன்தாராவும், சிம்புவும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். விருந்தும் சாப்பிட்டார்கள்.

2006இல் வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால் சில மாதங்களிNஷயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவுடன் நயன்தாரா நெருக்கமானார். இவருவரும் திருமணம் வரை வந்தனர்.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரபுதேவாவை மணப்பதற்காகவே இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இதுவும் கடைசி நேரத்தில் முறிந்தது. தற்போது நயன்தாரா தனியாகவே இருக்கிறார். பிரபுவேதவா இந்திப் படங்கள் இயக்க போய்விட்டார்.

இதற்கிடையில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்து போனது. சிம்புவும் தனியாக இருக்கிறார்.

டைரக்டர் பாண்டிராஜ் தனது இது நம்ம ஆளு படத்தில் இருவரையும் மீண்டும் ஜோடியாக்கினார். அப்போதுதான் இருவருக்கும் பழைய நட்பு துளிர்ந்தது. படப்பிடிப்பில் நெருக்கமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

இப்போது விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்க துவங்கியுள்ளனர். இது திருமணம் வரை போகலாம் என படஉலகினர் கிசுகிசுக்கின்றனர்.

காஜலின் ஒரு கோடி பேர்

ஸ்ருதி ஹாசனுக்கு 62 இலட்சம் பேரும், சமந்தாவை 52 இலட்சம் பேரும், அனுஷ்காவை 48 இலட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்

சமூக வலைத் தளங்களில் தங்கள் செல்வாக்கைக் காட்டுவதில் நடிகர் நடிகைகள் இன்றைக்கு குறியாக உள்ளனர். பத்திரிகைப் பேட்டியென்றால் சிணுங்கும் அவர்கள், தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

அந்த வகையில், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை பேஸ்புக்கில் (முகப்புத்தகம்) ஒரு கோடிப் பேர் தொடர்வதாக தகவல் வெளியானது. இப்போது தென்னிந்தியப் படங்களின் மூலம் புகழ்பெற்ற காஜல் அகர்வாலுக்கும் 1 கோடி ரசிகர்கள் பேஸ்புக்கில் தொடர்கின்றனர்.

பொம்மலாட்டம் படத்தில் பாரதிராஜாவால் அறிணிகப்படுத்தப்பட்டவர் காஜல். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இங்கு பெரிய வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்குப் போனார். அங்கு பெரிய நடிகையானார்.

தெலுங்கில் மகதீரா பெற்ற வெற்றியும், அதன் தமிழாக்கமான மாவீரனுக்கு தமிழில் கிடைத்த வரவேற்பும், மீண்டும் காஜலை கோடம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தது. துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா என பெரிய படங்களின் நாயகியானார்.

காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகை என்ற சாதனை படைத்துள்ளார்.

இவரது பேஸ்புக் பக்கத்தில் 1 கோடி ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இவருக்கு அடுத்து ஸ்ருதி ஹாசனுக்கு 62 இலட்சம் பேரும், சமந்தாவை 52 இலட்சம் பேரும், அனுஷ்காவை 48 இலட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X