2025 மே 19, திங்கட்கிழமை

அனுஷ்காவின் திண்டாட்டம்!

Menaka Mookandi   / 2014 மே 19 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழில் இரண்டாம் உலகம் திரைப்படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி திரைப்படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி திரைப்படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் ஒப்பந்தமிட்டு தனது காவலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் அஜீத்தின் 55ஆவது திரைப்பட வாய்ப்பும், ரஜினியின் லிங்கா திரைப்பட வாய்ப்பும் அனுஷ்காவை தேடிச்சென்றது. கடந்த 8 வருடங்களாக போராடிப் கிடைக்காத வாய்ப்பு இப்போது வாசல் கதவை வந்து தட்டுகிறபோது விட்டு விடுவாரா அனுஷ்கா? எப்படியோ ராஜமவுலியிடம் மன்றாடி இந்த இரண்டு திரைப்படங்களிலுமே நடிக்க அட்வான்ஸ் வாங்கி விட்டார்.

ஆனால், மொத்த கால்சீட்டாக கொடுக்கவில்லை. ராஜமவுலி இடையிடையே கொடுக்கிற இரண்டொரு நாள் ஓய்வைதான் இந்த திரைப்படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்திருக்கிறாராம்.
 
அதனால்தான், அஜீத்தின் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டு சில நாட்கள் நடித்துக்கொண்டிருக்கும் போண்து, ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து பாகுபாலிக்கு அழைக்கிறார்கள் என்று கௌதம் மேனனின் காது கடித்தாராம் அனுஷ்கா.
 
இந்த நிலைமையை சமாளிக்க நினைத்த இயக்குநர் கௌதம் மேனன்,  ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. அதனால், இனி அவுட்டோரில் படப்பிடிப்பு வேண்டாம். இன்டோரிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று அஜீத்திடம் சொன்னாராம். அத்துடன், அனுஷ்காவுக்காகவே படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டாராம்.
 
ஆனால், இந்த படப்பிடிப்பு அனுஷ்காவுக்காக நிறுத்தப்பட்டது என்ற விடயம் அஜீத்தின் காதுக்கு சென்றபோது கோபமாகி விட்டாராம் அஜீத்.
 
இதையடுத்து கௌதம்மேனனை தொடர்பு கொண்டவர், இது போகட்டும், இன்னொரு தடவையும் இதே மாதிரி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அனுஷ்கா போகக்கூடாது. அது உங்க பொறுப்புதான் என்று தனக்கே உரிய கடுமையை நிதானமாக கூறினாராம் அஜீத்.
 
இந்த செய்தி லிங்கா படக்குழுவுக்கும் செல்ல, அவர்களும் அனுஷ்கா விடயத்தில் முன்கூட்டியே உஷாராகியிருக்கிறார்களாம்.

ஹன்சிகாவுக்கு ஒரு கோடி

தமிழ் சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்ததால், அவரது மார்க்கெட் ஏறின வேகத்திலேயே இறங்கியது. அதனால் சில திரைப்படங்களில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் சிம்புவை விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார்.

அதையடுத்து, தனது மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட ஹன்சிகா தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார்.

என் ரேஞ்ச் நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா ஆகியோர் ரவுண்டாக ஒரு கோடி வாங்குகிறார்கள். அப்படியிருக்க நான் மட்டும் ஏன் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க வேண்டும் என்க்கூறி புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் ஒரு கோடி சம்பளம் கேட்கின்றாராம். இல்லை வந்த வழியே போய் விடுங்கள் என்று கறாராக கூறுகிறாராம் ஹன்சிகா.

வாலியாக மாறிய தனுஷ்

ஆர்.பால்கியின் இயக்கத்தில் இந்தி திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
 
ராஞ்ஹனா திரைப்படம் மூலம் பொலிவுட்டுக்கு சென்றவர் நடிகர் தனுஷ். அவரது முதல் இந்தி படமே ரூ 100 கோடி வசூல் சாதனை படைத்தது. மேலும் அந்த திரைப்படத்திற்காக தனுஷுக்கு பல விருதுகள் கிடைத்தன.
 
இதனையடுத்து, மற்றுமொறு இந்தி திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் தனுஷ். ஆர்.பால்கியின் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் தனுஷ்.
 
இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா நடித்து வருகிறார். மேலும் பொலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சனும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
 
படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. திரைப்படத்தில் துணை நடிகராக வரும் தனுஷுக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காதாம். இது தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் ஆகும்.

ராஞ்ஹனாவை போன்று இந்த திரைப்படத்திலும் தனுஷ் நடிப்பில் அசத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐஸ் - அபிஷேக் விவாகரத்து?

கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.
 
ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நிலவி வந்ததாம்.
 
இதனை அபிஷேக் பச்சன் கண்டுகொள்ளாததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக பொலிவுட்டில் செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து கணவரைப் பிரிய ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்திருப்பதாக இந்திய செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
 
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவழியாக எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து பெற்றுக்கொடுத்துவிட்டீர்கள். அப்படியே அடுத்த திருமணம் எப்போது என்றும் சொல்லிவிடுங்கள்! என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் பல நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கோ அது ஒரு முறை அல்ல, பல முறை கிடைத்து விட்டது.

முதன்முதலில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜியில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனமாடினார்.
 
அதன் பிறகு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் திரைப்படத்தில் ரஜினி நடிகராகவே நடிக்க, நயன்தாராவும் நடிகை வேடத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது ரவுண்டில் அஜீத், ஆர்யா, சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என்று மேல்தட்டு இளவட்டங்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ரஜினி நடிக்கும் லிங்காவிலும் நடிக்கிறாராம்.
 
இந்த திரைப்படத்தில் ஏற்கனவே இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றன போதிலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றுகிறாராம் நயன்தாரா.

இரண்டாவது ரவுண்டில் இதுவரை எந்த திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில்லை என்று கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நயன்தாரா, ரஜினி திரைப்படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை முதன்முறையாக தளர்த்தியிருக்கிறார்.

பார்த்திபனுக்காக பாடும் சினேகா

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் எனும் திரைப்படத்துக்காக பாடலொன்றைப் பாடியுள்ளார் நடிகை சினேகா.
 
நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் இயக்கத்தில் புதிதாக தயாராகிவரும் திரைப்படமே இந்த கதை திரைக்கதை வசனம் ஆகும்.
 
இதில், விசால், ஆர்யா, சிம்ரன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையிலேயே, இத்திரைப்படத்தில் பாடலொன்றைப் பாடுமாறு நடிகை சினேகாவிடம் பார்த்திபன் கோரியுள்ளார்.
 
பார்த்திபனின் இந்த அழைப்புக்கு உடனே ஒத்துக்கொண்டுள்ள சினேகா, அந்த பாடலைப் பாடுவதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம்.
 
சினேகாவின் நடிப்பில் உருவாகியுள்ள உன் சமையல் அறையில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிக்கு தாவிய தமன்னா

தன்னுடன் சினிமாவில் அறிமுகமான இலியானா இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தானும் எப்படியாவது இந்தியில் இடம்பிடித்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு வாய்ப்பு தேடியதில் ஹிம்மத்வாலாவில் நடித்தார் நடிகை தமன்னா.
 
அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் வெறுத்துப்போன தமன்னா, மீண்டும் தெலுங்கு, தமிழில் சுற்றி வந்தார். ஆனாலும் இந்தி ஆசை அவரை விட்டு விலவில்லை.

பொதுவாக இந்தி திரைப்படத்தில் உரிச்ச கோழியாக நடித்தால்தான் ஹீரோக்களுக்கும் பிடிக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதை தாமதமாக தெரிந்து கொண்டார் போலும்.
 
அதனால் தற்போது நடித்து வரும் ஹம்சகல்ஸ் திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். படத்தில் ஒரு நீச்சல் உடை காட்சியும், சயிப் அலிகானுடன் ஒரு முத்தக் காட்சியும் இருப்பதாக மும்பை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்திக்கு தக்கபடி தன் பெயரை தமன்னா பாட்டியா என்றும் வைத்துக்கொண்டார் தமன்னா. இந்த திரைப்படத்தில் பிபாசா பாசு மற்றும் ஈஷா குப்தா ஆகிய இருவருக்கும் போட்டியாக கவர்ச்சி களத்தில் குதித்திருக்கிறார் தமன்னா.

இந்திக்கு படு கவர்ச்சி, தெலுங்கிற்கு கவர்ச்சி, தமிழுக்கு குடும்ப குத்துவிளக்கு இதுதான் தமன்னாவின் லேட்டஸ்ட் பொலிஸி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X