2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

என் கவர்ச்சியை எப்படி வெளியிடலாம்: ஸ்ருதி முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் யவடு. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியானது.

இந்நிலையில் யவடு திரைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X