2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஹன்சிகாவின் மறுபக்கம்...

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹன்சிகா நடிகை மட்டுமல்ல, நன்கு ஓவியம் வரைபவரும் கூட. சிறு வயதில் இருந்தே நிறைய ஓவியங்களை வரைந்து வைத்துள்ளாராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஓய்வு நேரங்களிலும் ஓவியங்கள் வரைவதில் பொழுதைக் கழிக்கிறார்.

இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் வைத்து கண்காட்சி நடந்த திட்டமிட்டு உள்ளார். கண்காட்சியில் ஓவியங்களை விற்று ஏழை குழந்தைகள் கல்விக்காக நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இக்குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உணவு, தங்குமிடத்துக்கான செலவுகளை அவரே ஏற்றுள்ளார்.

வருகிற 9ஆம் திகதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் 5 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறாராம் ஹன்சிகா.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே ஹன்சிகா குழந்தைகள் நல அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். இந்த அறக்கட்டளை மூலம்தான் ஓவியக் கண்காட்சி நடத்தப் போகிறார்.

கண்காட்சி நடத்துவதற்கு முன்பாகவே ஹன்சிகா வரைந்த ராதாகிருஷ்ணா ஓவியத்துக்கு இந்திய ரூபாய்ப்படி 15 இலட்சம் கொடுத்துள்ளார் ஹன்சிகாவின் நண்பர்.

வீட்டில் இருந்த இந்த ஓவியத்தைப் பார்த்ததுமே இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டாராம் நண்பர்.




  Comments - 0

  • badra raman Monday, 04 August 2014 01:41 PM

    very nice my dr..... wish u all d best nd advance wish you happy birthday.....

    Reply : 0       0

    MOHOMMAD jifry Monday, 04 August 2014 03:25 PM

    அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானான. ஆமீன்...

    Reply : 0       0

    nalees Tuesday, 05 August 2014 11:16 AM

    Vary good I liked ^ivaraipponru eallaru utavinal nanraha irikkum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .