2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சமந்தாவின் காதலன்...

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. அழகும், நடிப்பு திறமையும் கொண்ட இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி, விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.

இந்நிலையில், தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும் அவர் நடித்த பீட்சா திரைப்படத்துக்குப் பின்னர் தான் அவரை காதலிப்பதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.

பீட்சா திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். படம் முடிவடைந்த பின், அவர் மீது எனக்கு தனியான மரியாதையே ஏற்பட்டது.

அவருடைய ரசிகையாகிவிட்டேன். அவரையும் அவரது நடிப்பையும் காதலிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

இதேவேளை, தனக்கு படங்கள் ஏதும் கிடைக்காமல் போகும் காலகட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதைவிட, பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தடாலடியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சில காலமாகவே நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு எதிலாவது கவனத்தை செலுத்திவேண்டும் என யோசித்து வருகிறேன்.

ஆனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. நான் இப்போதே சினிமாவை விட்டு விலகுவதை எனது நண்பர்களே விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.






  Comments - 0

  • jai Thursday, 18 September 2014 01:49 PM

    I like u

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .