2025 மே 19, திங்கட்கிழமை

நயனை துரத்தும் நித்யானந்தா

George   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.

ஏற்கனவே நயன்தாரா காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது. நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.

நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் காதலுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா ஆசிரம பக்தர்களின் அழைப்பை நயன்தாரா இதுவரை ஏற்கவில்லையாம்.





You May Also Like

  Comments - 0

  • Anithasuresh Wednesday, 08 October 2014 09:36 AM

    உடனடியாக நித்தியானந்தாவிடமிருந்து கன்னிப் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்...

    Reply : 0       0

    anwar Thursday, 09 October 2014 10:42 AM

    அவன்கிட்ட போகக்கூடாது நயன்தாரா...

    Reply : 0       0

    anwar Thursday, 09 October 2014 10:46 AM

    ஐ மிஷ் யூ நயந்தாரா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X