2025 மே 19, திங்கட்கிழமை

கத்திக்கும் லிங்காவுக்கும் லிங்க்

George   / 2014 நவம்பர் 09 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படமும் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள லிங்காதிரைப்படமும் ஒரே கதையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவாம்.

விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து கத்தி திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞனாக விஜய் நடித்திருந்தார்.

அதேபோல், ரஜினியின் லிங்கா திரைப்படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் பக்கம் நின்று போராடுபவராக ரஜினியின் கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

கத்தி திரைப்படத்தைப் பார்த்து லிங்கா படக்குழுவினர் அதிர்ச்சியானதாகவும் எனவே லிங்கா கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன.

கத்தி திரைப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இது போல் லிங்காவிலும் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கத்தி திரைப்படத்தின் மைய கருவில்தான் லிங்கா திரைப்படம் தயாராகிறதா என்று லிங்கா தயாரிப்பாளர் ரொக்iஷன் வெங்கடேஷிடம் கேட்டபோது, கத்திக்கும் லிங்காவுக்கும் சம்பந்தம் இல்லை. லிங்காவின் கதை வேறு.

லிங்காவின் கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக சொல்லப்படுவது வதந்திதான். மீண்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை.

லிங்கா படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைப்படத்தின் இறுதியில் ரஜினி வரும் காட்சியொன்றை சென்னையில் படமாக்குகிறோம். அது முக்கியத்துவமான காட்சி இல்லை. ரஜினி நடந்துவருவது போன்ற காட்சிதான். பாடல் வெளியீட்டுவிழாவை விரைவில் நடத்த தயாராகி வருகிறோம் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Venkatesh Monday, 10 November 2014 01:38 PM

    Ilankai LINGAA padathoda kathai naa soldran oru uril palam azika thittam podum villan ange LIGESEWARAN colector varuvar athai epadi thrkirar athan kathai

    Reply : 0       0

    karthi Tuesday, 11 November 2014 08:26 AM

    Kathikum kathikumae moths link illa..comedy panathenga

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X