2025 மே 19, திங்கட்கிழமை

தாமதமாகும் ஐ

George   / 2014 நவம்பர் 17 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஆர்.ரஹ்மானால் ஐ திரைப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒல்லிக்குச்சி முதல் பூசினாற் போன்ற உடம்பு என பல கெட்டப்புகளில் கலக்கும் படம் ஐ.

எமி ஜெக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விக்ரம் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் இன்னும் ஐ படம் ரிலீஸாகவில்லை.

இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இந்நிலையில் படம் ரிலீஸாவதில் ஏன் தாமதம் ஆகிறது என தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றி இவர் கூறுகையில்,

பின்னணி இசை வேலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். அவர் 6 ரீல்களுக்கு இசையமைத்துவிட்டார். இன்னும் 5 ரீல்களுக்கு இசையமைக்க வேண்டும்.

படத்திற்கு அருமையான இசையமைக்க வேண்டும் என்பதால் தான் அவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அவர் கடந்த 5 மாதங்களாக சென்னை மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள ஸ்டுடியோக்களில் வேலை பார்த்து வருகிறார்.

படம் நிச்சயம் டிசெம்பரில் ரிலீஸாகும். டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாகக்கூடும் என்றார்.






You May Also Like

  Comments - 0

  • prabu Thursday, 20 November 2014 06:56 AM

    I m waiting....

    Reply : 0       0

    thamizharasan Thursday, 20 November 2014 08:51 AM

    Padam Eppadi irukkum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X