2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவின் ல்தகாசைஆ

George   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகைகளை ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள். எங்களுக்கும் காதல், திருமண ஆசை எல்லாம் இருக்கும்தானே என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அண்மையில்  செய்திகள் வெளியாகின.

இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்தன. இது த்ரிஷாவின் திரைப்படங்களை பாதிக்க ஆரம்பித்துள்ளதாம். இதனால், புதுத் திரைப்பட வாய்ப்பும் பறிபோயுள்ளனவாம்.

இதனால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். இந்நிலையில், திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, 'கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கின்றன' என்றார்.

'மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று த்ரிஷா மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X