Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2014 டிசெம்பர் 21 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நட்பு காதலாய் மலர்வதும், காதல் நட்பால் வளர்வதும் இதுநாள் வரையும் திரையில் கண்டு இருக்கிறோம். நட்பு காதலுக்கு எதிரியாய் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கலக்கல் கொமடியோடு சொல்ல வருகிறது 'கப்பல்'.
புதுமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் இந்த திரைப்படத்தில் காதலுக்கும், நட்புக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனாக வைபவ் வருகிறார்.
இது குறித்து வைபவ் கூறியதாவது, என் கதாப்பாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை பிரதிபலிப்பதால் ரசிகர்களை எளிதில் கவரும். தமிழ் சினிமா வரலாற்றிலயே எனது நண்பர்களாக வரும் கருணா, அர்ஜுனன், வெங்கட் மற்றும் கார்த்திக் மட்டும்தான் நண்பனின் காதலுக்கு வில்லனாய் வருபவர்களாக இருக்க முடியும்.
என் காதலை பிரிக்க இவர்களின் திட்டம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை இயக்குநர் கார்த்திக் மிகவும் நகைச்சுவையாய் கூறியுள்ளார். ஹீரோயின் சோனம் பாஜ்வா என்னை அறைவது போல் காட்சியில் என் கன்னம் சிவக்க பல டேக்ஸ் போனார்.
நானும் ரொம்ப நேரம் வலிக்காத மாதிரிதான் நடிச்சேன். மங்காத்தா திரைப்படத்தில் கூட செம்ம அடி வாங்கினேன். நல்ல பேர் கிடைச்சுது.
இப்போ மறுபடியும் அடி, செண்டிமெண்ட் தொடர்ந்தால் சரி. குட்டு பட்டாலும் lady’s fingerல தான் குட்டு வாங்கணும் எனகிறார் வைபவ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025