2025 மே 19, திங்கட்கிழமை

லக்ஷ்மியின் டோனி மச்சம்

George   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியுடன்; இணைத்து தன்னைப் பற்றி வதந்தி கிளப்புகிறார்கள் என்று நடிகை ராய் லக்ஷ்மி கவலை தெரிவித்துள்ளார்.

'டோனியையும், என்னையும் இணைத்து தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இதை நான் மறுத்து விட்டேன். ஆனாலும் கறை, மச்சம் மாதிரி இந்த வதந்தி மட்டும் மாறாமல் இன்னும் இருக்கிறது.

தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்களே என நினைக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. டோனிக்கு பிறகு வேறு தொடர்புகள் ஏற்பட்ட பிறகும் அதுபற்றி யாரும் பேசுவது இல்லை' என்று ராய் லக்ஷ்மி கூறியுள்ளார்.

டோனியே அவரை மறந்த பிறகு ஏன் இப்படியொரு அறிக்கை? உண்மையிலேயே டோனியையும், ராய் லக்ஷ்மியையும் இணைத்து இப்போதும் வதந்தி கிளப்புகிறார்களா இல்லை ராய் லக்ஷ்மி பழைய வதந்தியை புதுப்பிக்க நினைக்கிறாரா? என சினிமா உலகில் கிசுகிசுக்கப்படுகின்றது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X