2025 மே 19, திங்கட்கிழமை

சன்னியாசியாகிறார் நயன்...

Menaka Mookandi   / 2015 ஜனவரி 15 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


காதல் தோல்வியடைந்தவர்கள் நிம்மதியைத் தேடி ஆன்மிகத்துக்கும் இன்னும் சிலர் தேவதாஸ் பாணியில் பாட்டிலுக்கும் தாவி விடுகின்றனர். சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வியில் துவண்டுபோனவர் நயன்தாரா. அவர் தேர்வு செய்திருக்கும் பாதை சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இனி காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், சன்னியாசி ஆகிவிடலாம் என அவர் எண்ணி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவர் சன்னியாசிகளுடன் அமர்ந்து அமைதி தேடுகிறாராம்.

கடந்த ஆண்டு இமயமலை சென்ற அவர் அங்கிருந்த சாமியார்களுடன் மனம்விட்டு பேசி ஆறுதல் தேடினார். தனுஸ்ரீ தத்தா, ராகசுதா போன்றவர்கள் சன்னியாசம் வாங்கினர். இவர்களில் ராகசுதா மனதை மாற்றிக்கொண்டு நடிகர் ரஞ்சித்தை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்துக்கு திரும்பினார்.

மன சஞ்சலத்தில் இருக்கும் நயன், சில நடிகைகள் எடுத்ததுபோல் சன்னியாசியாகும் முடிவை எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பேச்சு உள்ளது. தற்போது பட எண்ணிகையை அவர் வெகுவாக குறைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X