2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

எமி என்றால் கவர்ச்சி

George   / 2015 ஜனவரி 19 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


கோடம்பாக்கத்தில் கோலேச்சி வரும் நடிகைகளில் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள்தான் அதிக கவர்ச்சி காட்டுவதாக கூறப்பட்டு வந்தது. நயன்தாராவைப் பொறுத்தவரை பில்லாவில் பிகினி உடை தரித்தவர் அண்மைகாலமாக அதிக கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு மிதமான கிளாமருக்கு மாறியிருக்கிறார்.

அதேபோல், பையா உள்ளிட்ட திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்த தமன்னா, வீரம் திரைப்படத்தில் குடும்பப்பாங்காக நடித்தார்.

இப்போது சரவணனும் வாசுவும் ஒன்னா படிச்சவங்க திரைப்படத்திலும் ஓரளவு கிளாமராக நடித்துக்கொண்டிருக்கிறார். 

அதோடு, அடுத்தபடியாக சரியான கதை அமைந்தால் கவர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறவும் தயங்க மாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த நிலையில், ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சன் சில காட்சிகளில் படு கவர்ச்சியாக நடித்ததைப்பார்த்த தமன்னா, அதிர்ச்சியடைந்து விட்டாராம். 

அந்த திரைப்படத்தில் எமி நடித்த ஒவ்வொரு உடை பற்றியும் விவாதம் செய்து வரும் தமன்னா, எமி ஜாக்சனின் நடிப்பை பார்த்த பிறகு நான் நடிப்பதெல்லாம் கவர்ச்சியே இல்லை என்றாகி விட்டது என்று தனது நிலையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும், எமி ஜாக்சன் ரேஞ்சுக்கெல்லாம் என்னால் ஒருநாளும் நடிக்க முடியாது என்றும் தனது நிலையை வெளிப்படையாக கூறுகிறாராம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .